
ஹவில்தார் பழனி 18 வயதிலேயே தேசப்பற்று காரணமாக இந்திய தரைப்படையில் இணைந்தார். பீஹார் ரெஜிமென்ட்டின் 16ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.
பல ராணுவ வீரர்களை போலவே ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டவர். பல ஆண்டுகளாக கனவு கண்டு ஆசையாக ஒரு வீட்டை தற்போது தான் கட்டி முடித்தார்.
இனி விடுமுறையில் வந்து கிரக பிரவேசம் முடித்துவிட்டு புதிய வீட்டில் குடியேற திட்டமிட்டு இருந்தார்.
அந்த நேரத்தில் லடாக்கில் இந்த பிரச்சினை தொடங்கியது. அவரது மனைவி வானதியிடம் வழக்கமாக ராணுவ வீரர்கள் வீட்டில் கூறுவது போல “இங்கு பிரச்சினையாக உள்ளது, தற்போது விடுமுறைக்கு வருவது கஷ்டம்” என கூறியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக நேற்று ஹவில்தார். பழனி வீரமரணமடைந்தார் என்ற செய்தி அவரது குடும்பத்தினரை எட்டியுள்ளது.
தேசப்பற்று மிகுந்த அவர் தனது மகனையும் ராணுவத்தில் அதிகாரியாக சேர்க்க விரும்பினார். அவரது ஆசை நிறைவேற பிரார்த்திக்கிறோம்.
இந்திய தேசத்தின் மாவீரனுக்கு எமது ராயல் சல்யூட் !!