ஒரே வருமானத்தையும் இழந்து தவிக்கும் ஹவில்தார் பழனி அவர்களின் குடும்பம்

  • Tamil Defense
  • June 17, 2020
  • Comments Off on ஒரே வருமானத்தையும் இழந்து தவிக்கும் ஹவில்தார் பழனி அவர்களின் குடும்பம்

இந்திய-சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுள் ஒருவர் தான் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதியை சேர்ந்த ஹவில்தார் பழனி ஆவார்.
கடந்த 22 வருடமாக இடைவிடாத தேச சேவையில் ஈடுபட்டவர்.அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தின் ஒரே வருமானமாக இருந்த ஹவில்தார் பழனியை இழந்து அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஹவில்தார் பழனி அவர்கள் தவிர கலோனல் சந்தோஷ் மற்றும் சிபாய் ஓஜா ஆகிய இரு வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தற்போது தமிழக முதல்வர் வீரரின் குடும்பத்திற்கு 20லட்சம் நிதி உதவியும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி தான் கடைசியாக வீடு வந்துள்ளார் ஹவில்தார் பழனி.அவரது வருமானத்தை நம்பி தான் குடும்பமே இயங்குகிறது என அவரது மாமனார் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் வரவழைக்கிறது.