அமெரிக்காவிற்கு அருகாமையில் பறந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை திரும்ப அனுப்பிய அமெரிக்க விமானப்படை !!

  • Tamil Defense
  • June 11, 2020
  • Comments Off on அமெரிக்காவிற்கு அருகாமையில் பறந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை திரும்ப அனுப்பிய அமெரிக்க விமானப்படை !!

அமெரிக்க விமானப்படையின் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் அமெரிக்க எல்லைக்கு அருகே பறந்த ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்து திரும்ப அனுப்பியுள்ளது.

புதன்கிழமை அன்று அலாஸ்காவுக்கு மிக அருகே அதாவது 20நாட்டிகல் மைல் தொலைவில் 2 டியு90 குண்டுவீச்சு விமானங்களும், 2 சு35 விமானங்களும், 1 ஏ50 ஏவாக்ஸ் விமானமும் இடைமறிக்கப்பட்டுள்ளன.

அதே நாளில் அலாஸ்காவுக்கு 32 நாட்டிகல் மைல்கள் தொலைவில் பறந்து கொண்டிருந்த இரண்டு டியு90 குண்டுவீச்சு விமானங்களும், ஒரு ஏ50 ஏவாக்ஸ் விமானமும் அமெரிக்க விமானப்படையால் இடைமறிக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டன.

இந்த நடவடிக்கையில் அமெரிக்க விமானப்படையின் எஃப்22 ராப்டர் போர் விமானங்கள், இ3 ஏவாக்ஸ் விமானங்கள், கேசி135 டேங்கர் விமானங்கள் ஆகியவை பங்கு பெற்றன.

இது குறித்து ட்விட்டரில் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் அமெரிக்க எல்லைகளை 24×7 பாதுகாக்க தயாராக உள்ளதாக பதிவு செய்திருந்தது.