இந்தியாவுக்கு மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகளை சப்ளை செய்ய தொடங்கிய ரஷ்யா !!

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on இந்தியாவுக்கு மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகளை சப்ளை செய்ய தொடங்கிய ரஷ்யா !!

இந்திய அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில் ரஷ்யா மேம்படுத்தப்பட்ட வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளின் சப்ளையை தொடங்கி உள்ளது. அந்த வகையில் மூன்று வகையான மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகளை நாம் பெற உள்ளோம்.

இந்த ஏவுகணைகளை இந்திய விமானப்படையின் 50% பலமான சுகோய்30, மிக்29 ஆகிய போர் விமானங்களில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

முதலாவதாக, மேம்படுத்தப்பட்ட R-77 ஏவுகணை, தற்போது இது 110கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது, முன்னர் இது வெறும் 80கிமீ தாக்குதல் வரம்பை மட்டுமே கொண்டிருந்தது.

அடுத்ததாக
மேம்படுத்தப்பட்ட R-27 ஏவுகணையை பெற உள்ளோம். இது முன்னர் வெறுமனே 80கிமீ தாக்குதல் வரம்பை கொண்டிருந்தது தற்போது 100கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ளதாக மேம்படுத்தப்பட்டு
உள்ளது.

அடுத்ததாக RVV-MD எனும் ஏவுகணையை பெற உள்ளோம் இது முன்னர் 40கிமீ தாக்குதல் வரம்பை கொண்டிருந்தது தற்போது 50கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது. இந்த ஏவுகணையை பயன்படுத்தி தான் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்16 போர் விமானத்தை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணைகளை போர்க்கால அடிப்படையில் சிறப்பு விமானங்களில் ரஷ்யா அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.