சீனாவுக்கு விமானந்தாங்கி கப்பல் கட்ட தேவையான முக்கியமான கலப்பு உலோகத்தை விற்க ரஷ்யா மறுப்பு !!

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on சீனாவுக்கு விமானந்தாங்கி கப்பல் கட்ட தேவையான முக்கியமான கலப்பு உலோகத்தை விற்க ரஷ்யா மறுப்பு !!

விமானந்தாங்கி கப்பல்கள் கட்ட பயன்படும் உலோகமானது வழக்கமான உலோகங்களை விடவும் வித்தியாசமானதாகும்,
காரணம் அவை அதிக துரு அரிப்பு எதிர்ப்பு தன்மை மற்றும் அதிக வலிமை கொண்டவையாக இருக்கும்.

காரணம் கப்பல்கள் மிக நீண்ட காலம் கடலிலேயே தங்கி இருக்கக்கூடியவை ஆகும் மேலும் விமானங்களின் எடையை ஆயுதங்களுடன் மேலேழும்புகையிலும், தரை இறங்குகையிலும் தாங்க வேண்டியதாகிறது.

சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உரசல் மிகுந்த உறவை கொண்டுள்ளது ஆகையால் மேற்குலகிடமிருந்து இத்தகைய உலோகமோ அல்லது அது சார்ந்த தொழில்நுட்பமோ பெறுவதோ முடியாத காரியம் ஆகும்.

இந்த நிலையில் ரஷ்ய உதவியை சீனா நாடியது, மிக நீண்ட காலமாகவே இந்த கலப்பு உலோகத்தை தயாரிக்கும் முறையை தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து அறிந்து கொள்ள சீனா ஆர்வம் காட்டி வந்தது.

ஆனால் ரஷ்யா இத்தகைய உலோகத்தை விற்கவோ அல்லது அதன் ரகசியத்தை தெரிவிக்கவோ மறுத்து விட்டதுஇதனால் சீனா கடும் ஏமாற்றத்தை சந்தித்து உள்ளது.