
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
182வது பட்டாலியனைச் சேர்ந்த தலைமைக் காவலர் காலே சுனில் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.அவர் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவர்.
புல்வாமாவின் பன்ஷு ஏரியாவில் இந்த என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதிகளிடம் இருந்து இரு ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.