
நேற்று முன்தினம் இரவு லடாக்கில் கல்வான் நாலா பகுதியில் இந்திய சீன படைகளிடையே நடைபெற்ற மோதலில் சுமார் 1 கர்னல் உட்பட 23 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
சீன ராணுவ வீரர்கள் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் அமெரிக்க உளவுத்துறை 35க்கும் அதிகமான சீன வீரர்கள் மரணமடைந்து இருப்பதை உறுதி செய்துள்ளது.
இந்தியாவை விட தனது வீரர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருக்க வேண்டுமென சீனா விரும்புகிறது. அதாவது தனது ஜாம்பவான் இமேஜ் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கிறது.
மேலும் சீன ஊடகங்களுக்கு அரசு தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.