முழுமையாக ஆயுதம் தரித்து அடுத்த மாதம் இந்தியா வரும் ரபேல் விமானங்கள்

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on முழுமையாக ஆயுதம் தரித்து அடுத்த மாதம் இந்தியா வரும் ரபேல் விமானங்கள்

“கட்டிங் எட்ஜ் ” அதாவது இருப்பதிலேயே அதிநவீன ரபேல் விமானம் உலகின் தலைசிறந்த  வான்-வான் ஏவுகணைகளுடன் வரும் ஜீலை 27 அன்று இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக நான்கு விமானங்கள் இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.தற்போது மேலதிக விமானங்கள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக எட்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன எனினும் எத்தனை விமானங்கள் இந்தியா வரும் என தெளிவாக தெரியவில்லை.

இந்த ரபேல் விமானங்களில் இந்திய விமானிகள் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர் என்பதால் இந்த விமானங்களை இந்திய விமானிகளே இந்தியாவிற்கு கொண்டு வருவர்.இந்தியா வரும் போதே தாக்குதலுக்கு தயார் நிலையில் வரும்.அதாவது அவற்றை நேரடியாகவே களத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும்.பிரான்ஸ் தனது வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்களை இந்த ரபேல் விமானங்களோடு அனுப்ப உள்ளதால் ஒரேயடியாக அவை இந்தியா வந்து சேரும்.

இவை தவிர இந்தியாவின் நம்பத்தகுந்த நண்பரான இஸ்ரேல் மிக விரைவிலேயே மிகத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்க உள்ளது.இந்த அமைப்பு எல்லைகளில் விரைவில் தனது செயல்பாட்டை தொடங்கும்.அந்த அமைப்பின் பெயர் எதும் வெளியிடப்படவில்லை.இஸ்ரேல் படைகளிம் இருந்து நேரடியாக இந்த அமைப்பு பெறப்பட்டு லடாக் பகுதியில் நிறுத்தப்பட உள்ளது.

விமானப்படைக்கு வானில் இருந்து நிலம் நோக்கி வீசப்படும் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தேவையாக உள்ளது.இராணுவத்திற்கு டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் வீரர்களால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவையாக உள்ளது.சுமார் 1 பில்லியன்கள் டாலர் அளவில் இவை இரஷ்யாவில் இருந்து விரைவில் இந்தியாவிற்கு வரும்.

அமெரிக்கா இந்தியாவிற்கு செயற்கைகோள் படங்கள் மற்றும் இராணுவ உளவுத் தகவல்களை வழங்கி எல்லை நிலவரம் குறித்து அறிய இந்தியாவிற்கு உதவி வருகிறது.மேலும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலதிக எக்ஸ்காலிபர் ஆர்டில்லரி குண்டுகள் அவசரமாக அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது இந்தியா.எம்777 ஆர்டில்லரியிலா இருந்து ஏவப்படக்கூடிய இந்த குண்டுகள் மிகத்துல்லியமாக 40கிமீ வரை உள்ள எதிரி இலக்குகளை அழிக்க வல்லது.