பலூச்சிஸ்தானில் 4 வயது சிறுவன் ஒருவனை அவனது தாயுடன் சேர்த்து சில அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இதன் பின்னால் பாக் ராணுவம் இருப்பதாக பலூச்சிஸ்தான் மக்கள் நம்புகின்றனர்.
இதனையடுத்து நீதி கேட்டு பராபாச் நகரில் தீவிர போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டக்காரர்கள் பாக் பாதுகாப்பு படையினரின் காவல் சாவடிகள் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனையடுத்து பாக் படையினர் தலை தெறிக்க ஒடியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பலூச்சிஸ்தான் மாகாணத்தில் கடத்தல்கள், கொலைகள் போன்றவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.