
பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலின் பிஆர்பி ராமோன் அல்கராஸ் கடந்த மே 7 அன்று கொச்சின் கடற்கரை பகுதியில் என்ஜின் தீ காரணமாக சேதத்திற்குள்ளானது.பிறகு இந்த போர்க்கப்பலை சீரமைக்க இந்தியா உதவியது.இதன் பிறகு செய்தி வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கடற்படை இந்தியாவுடன் ஆழ்ந்த கடற்சார் உறவை பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது.
“துரதிஷ்டவசமான இந்த சம்பவத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான உதவியை இந்தியா வழங்கியுள்ளது.இந்தியா-பிலிப்ஸ் உறவிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது” என வைஸ் அட்மிரல் ஜியோவன்னி கார்லோ தெரிவித்துள்ளார்.
ஈரான் அமெரிக்க மோதல் பதற்றம் காரணமாக ஈரானில் உள்ள பிலின்பைன்ஸ் தொழிலாளர்களை மீட்க மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்ட நேவல் டாஸ்க் படை 82 ன் கீழ் அனுப்பப்பட்ட இரு பிலிப்பைன்ஸ் கப்பல்களுள் ஒன்று தான் பிஆர்பி ராமோன் அர்காராஸ் ஆகும்.தனது பயணத்தின் போது மே 7 அன்று அதன் என்ஜின் தீப்பற்றியது.முன்னதாக வீடு திரும்ப எண்ணிய கப்பல் அதன் பிறகு இந்தியாவின் கொச்சின் வந்தடைந்தது.
இந்தியா உதவி செய்ய மே27 அன்று பணிகள் முடிவடைந்தது.அதன் பிறகு இரு கப்பல்களும் தனது பயணத்தை தொடங்கி ஜீன் 12 அன்று மணிலா சென்றடைந்தது.