ஃபிலப்பைன்ஸ் கடற்படை கப்பலை சரி செய்ததற்கும், ஃபிலப்பைன்ஸ் கடற்படை வீரர்களை கவனித்து கொண்டதற்கும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ஃபிலப்பைன்ஸ் !!

  • Tamil Defense
  • June 14, 2020
  • Comments Off on ஃபிலப்பைன்ஸ் கடற்படை கப்பலை சரி செய்ததற்கும், ஃபிலப்பைன்ஸ் கடற்படை வீரர்களை கவனித்து கொண்டதற்கும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ஃபிலப்பைன்ஸ் !!

ஃபிலப்பைன்ஸ் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜியோவான்னி கார்லோ இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்களது நாட்டு கடற்படை கப்பலில் ஏற்பட்ட விபத்தின் போது தக்க சமயத்தில் உதவி கப்பலை இலவசமாக சரி செய்து தந்ததோடு மட்டுமில்லாமல் காயமடைந்த வீரர்களை இன்றளவு வரை கவனித்து வருவதற்காக நன்றி தெரிவித்துள்ளார் மேலும் இந்திய கடற்படை மற்றும் ஃபிலப்பைன்ஸ் கடற்படை இடையேயான உறவு பலபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஃபிலப்பைன்ஸ் ராணுவத்தின் கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் ஃபிலெமோன் சான்டோஸ் நமது கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ஃபிலிப்பைன்ஸ் தூதர் ரமோன் எஸ் பகட்ஸிங் அவர்களும் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த மே 7 அன்று ஃபிலிப்பைன்ஸ் கடற்படையின் பி.ஆர்.பி ரமோன் ஆல்காரெஸ் எனும் கப்பல் இந்தியாவுக்கு சற்று தொலைவில் பயணித்து கொண்டிருந்த போது என்ஜின் தீப்பற்றி கொண்டது. இந்த விபத்தில் இரண்டு ஃபிலிப்பைன்ஸ் கடற்படையினர் காயமடைந்தனர்.

உடனடியாக ஃபிலிப்பைன்ஸ் கடற்படை தில்லியில் உள்ள தங்களது தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரியான கர்னல் ரொனால்டோ வி ஜூவானை தொடர்பு கொள்ள அவர் இந்திய கடற்படை தலைமையகத்தை தொடர்பு கொண்டார். உடனடியாக கடற்படை செயலில் இறங்கியது. உள்நாட்டு கருவிகளை வைத்தே கப்பலை சரி செய்ததோடு மட்டுமில்லாமல் காயமடைந்த வீரர்களை கடற்படை மருத்துவமனையில் வைத்து கவனித்து கொண்டது. படுகாயமடைந்த வீரர் ஒருவர் இன்றளவு வரை பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கப்பல் மே27 அன்று ஃபிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.