
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படையின் 90ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர் ஷாமல் குமார் மற்றும் 6வயது குழந்தை நுஹான் ஆகியோர் மரணமடைந்தனர்.
இதையடுத்து அனந்த்னாக் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.