எல்லையோரம் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் !!

  • Tamil Defense
  • June 10, 2020
  • Comments Off on எல்லையோரம் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் !!

நேற்று காலை 6.30 மணியளவில் எல்லை கட்டுபாட்டு கோடருகே பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கொட்டி செக்டாரில் பாக் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் பாக் ராணுவம் மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி தாக்கியுள்ளது. காலை தொடங்கிய தாக்குதல் மாலை வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.