
ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் லடாக் எல்லை பிரச்சினையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலும் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தரைப்படை, துணை ராணுவப்படைகள் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் தொடர்ந்து வெற்றிகரமாக பயங்கரவாதிகளை ஒடுக்கி வரும் நிலையில் காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்யலாம் எனவும் கூறினார்.
மேலும் முக்கிய பகுதிகள், சாலைகள் , சந்திப்புகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்றதாகவும் அவர் கூறினார்.
மேலும் எல்லை கட்டுபாட்டு கோடுக்கு அந்த பக்கம் சுமார் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.