இந்திய விமானப்படை தாக்குதல் என பதறி கராச்சி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு – பாலகோட் தாக்குதல் விளைவு !!

  • Tamil Defense
  • June 10, 2020
  • Comments Off on இந்திய விமானப்படை தாக்குதல் என பதறி கராச்சி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு – பாலகோட் தாக்குதல் விளைவு !!

செவ்வாய்க்கிழமை அன்று பின்இரவு நேரத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்து விட்டதாகவும், மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் பாகிஸ்தானின் கராச்சி நகர மக்கள் பதறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அப்பதிவுகளில் சிலர் இந்தியாவை சாடியும், சிலர் அச்சத்திலும் பதட்டத்திலும், சிலர் பாக் விமானப்படை விமானங்கள் பறக்கும் வீடியோக்களை இந்திய விமானப்படை விமானங்கள் என்றும் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் இந்திய விமானப்படை இத்தகயை செய்திகளை மறுத்துள்ளது, பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை அவர்கள் தவறாக இந்திய விமானப்படை விமானங்கள் என்று எண்ணி இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

மக்களை அப்படி எதுவும் இல்லை என சமாதானப்படுத்தாமல் அரசு நிராவாகமும் பிதியடைந்து எதிரி நாட்டு விமானப்படைகளின் தாக்குதலின் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையான மின்சார துண்டிப்பை மேற்கொண்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு தங்கள் நாட்டில் வந்து தாக்குதல் நடத்தும் துணிவே இல்லை என்ற பாகிஸ்தானியர்கள் கராச்சி நகரம் வரை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளதாக பீதியடைந்துள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

எல்லாம் பாலகோட் தாக்குதலின் மகிமை !!
😂😂