ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பாக் ராணுவம் ஆதாரம்

  • Tamil Defense
  • June 6, 2020
  • Comments Off on ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பாக் ராணுவம் ஆதாரம்

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களை ஐ.எஸ்.ஐ இயக்குகிறது எனவும் பல பயங்கரவாத முகாம்களை அங்கு தலிபான்கள் உதவியோடு பாக் அமைத்து பயிற்சி அளித்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.

தற்போது இவற்றிற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதில் பாக் ராணுவ வீரர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் தலிபானாக இருக்கும் படமாகும்.

இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் பல்லாயிரம் பாகிஸ்தானியர்கள் ஆஃப்கானிஸ்தானில் (லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இயக்கங்களின் உறுப்பினர்கள்) தலிபான்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.