Breaking News

மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் !!

  • Tamil Defense
  • June 7, 2020
  • Comments Off on மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் !!

நேற்று இரவு பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டங்களில் சர்வதேச எல்லையோரம் அருகே அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி மற்றும் கஸ்பா செக்டார்களில் இரவு 8மணி அளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர் இதற்கு நமது தரைப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இதைப்போல் இரவு 12.45 மணியளவில் கத்துவா மாவட்டம் சந்த்வா மற்றும் கரோல் மித்ராய் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்கி உள்ளனர், இதற்கு நமது எல்லை பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர் இச்சண்டை அதிகாலை 3 மணிவரை நீடித்து உள்ளது.

இப்பகுதி மக்கள் இச்சண்டையால் அச்சமடைந்து இரவு முழுவதும் பங்கர்களில் தங்கி உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.