எல்லையோரம் பாகிஸ்தான் அத்துமீறல் 4 சிவிலியன்கள் காயம் !!

  • Tamil Defense
  • June 20, 2020
  • Comments Off on எல்லையோரம் பாகிஸ்தான் அத்துமீறல் 4 சிவிலியன்கள் காயம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் செக்டாரில் இன்று மதியம் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

மோர்ட்டார்களை கொண்டும் துப்பாக்கிகளை கொண்டும் நடத்திய இந்த தாக்குதலில் 4 பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் இன்று காலை கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டாரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.