
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுகையில் அல் காய்தா பயங்கரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லாடனை அமரர் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் நட்பு நாடாக பழகினோம், ஆனால் அவர்கள் நமது நாட்டை அவமானபடுத்தி விட்டார்கள்.
நம்மிடம் தகவல் தெரிவிக்காமலேயே உள் நுழைந்து ஒசாமா பின் லாடன் அவர்களை கொன்றனர், அவர் வீரமரணமடைந்தார் என கூறினார்.
மேலும் இந்த நிகழ்விற்கு பின்னர் உலக நாடுகள் நம்மை ஏளனமாக பார்க்க தொடங்கின, பெருத்த அவமானத்தை பாகிஸ்தான் சந்தித்தது என்றார்.
ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடைய இந்த பேச்சுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.