Breaking News

இந்தியாவை விட அதிக அணுஆயுதங்கள் வைத்திக்கும் பாக் மற்றும் சீனா-இந்தியாவிற்கு ஆபத்தா?

  • Tamil Defense
  • June 15, 2020
  • Comments Off on இந்தியாவை விட அதிக அணுஆயுதங்கள் வைத்திக்கும் பாக் மற்றும் சீனா-இந்தியாவிற்கு ஆபத்தா?

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவை விட அதிக அணுஆயுதங்களை வைத்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

சீனாவிடம் ஏறக்குறைய 320 அணுஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் 160 ஏவுகணைகளும் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.அதே நேரம் இந்தியா 150 ஏவுகணைகள் வரை வைத்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

2019ன் தொடக்கத்தில் சீனாவிடம் 290 ஏவுகணைகளும் பாக்கிடம் 150-160 ஏவுகணைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டது.இந்தியாவிடம் 140-150 ஏவுகணைகள் இருப்பதாக கூறப்பட்டது.தற்போது அனைத்து நாடுகளும் தங்களது அணுஆயுத எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவும் சீனாவும் எல்லையில் மோதிவரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா தனது அணுசார் ஆயுதங்களை நவீனப்படுத்தியுள்ளது எனவும் மூன்று நிலம் நீர் வானம் என மூன்று நிலைகளில் இருந்தும் அணுவை ஏவும் ஆற்றலை மேம்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தனது அணுசார் ஆயுதங்களை மெதுவாக அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

6,375 மற்றும் 5,800 அணுஆயுதங்கள் முறையே இரஷ்யாவும் அமெரிக்காவும் கொண்டுள்ளன.உலகின் மொத்த அணுஆயுதங்களில் இது மட்டும் 90% ஆகும்.

அமெரிக்கா,இரஷ்யா,இங்கிலாந்து,பிரான்ஸ்,சீனா,இந்தியா,பாக்,இஸ்ரேல் மற்றும் வடகொரியா என உலகின் ஒன்பது நாடுகள் அணுஆயுங்களை வைத்துள்ளன.இவற்றின் மொத்த எண்ணிக்கை சுமார் 13,400 என கணிக்கப்பட்டுள்ளது.

2019ல் 13,865 ஆயுதமாக இருந்த மொத்த எண்ணிக்கை தற்போது 2020ல் 13400ஆக குறைந்துள்ளது.