பாகிஸ்தான் படையினர் எல்லையில் மீண்டும் அத்துமீறல் !!

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிகளை கொண்டு சுட்டும், மோர்ட்டார்களை கொண்டும் இந்திய நிலைகளை தாக்கியுள்ளனர்.

இதற்கு இந்திய படையினரும் பதிலடி கொடுத்துள்ளதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.