12 சீனர்களை துவம்ச செய்த ஒரு தம்பி வீரர்

  • Tamil Defense
  • June 21, 2020
  • Comments Off on 12 சீனர்களை துவம்ச செய்த ஒரு தம்பி வீரர்

இந்திய சீன எல்லைப் பிரச்சனை தற்போது பெரிதாகி கொண்டே வருகிறது.கடந்த ஜீன் 15 அன்று இரு நாட்டு துருப்புகளும் லடாக்கின் கல்வான் பகுதியில் கடுமையாக மோதிக்கொண்டன.

இந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.40 சீன வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்.இந்த சண்டை கை,கற்கள் மற்றும் தடிகளால் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த சண்டை குறித்த புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.அதாவது ஒரு தம்பி வீரர் 12 சீனவீரர்களை அடித்து துவம்சம் செய்துள்ளார்.

தம்பி என்பது மெட்ராஸ் ரெஜிமென்ட் அல்லது தமிழக வீரர்களை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.

இந்த தம்பி வீரர் ஆர்டில்லரி ரெஜிமென்டை சேர்ந்தவர் ஆவார்.