
பாக் இராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கிர்னி செக்டார்களில் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்திய இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பத்து பாக் இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.