எல்லை மோதல் எதிரொலி-லடாக்கிற்கு அதிக எரிபொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள்

  • Tamil Defense
  • June 21, 2020
  • Comments Off on எல்லை மோதல் எதிரொலி-லடாக்கிற்கு அதிக எரிபொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள்

கல்வான் பகுதியில் நடைபெற்ற பயங்கர மோதலுக்கு பிறகு கல்வான் பகுதி மற்றும் பேங்கோங் ட்சோ ஏரிப்பகுதிகளுக்கு அதிக துருப்புகளை இந்தியாவும் சீனாவும் நகர்த்தி வருகின்றன்.

இந்நிலையில் லடாக்கில் உள்ள படைகளின் தேவைகளுக்காக மேலதிக ஆயில் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பி வருகின்றன.

படைப் பிரிவுகளின் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால் மேலதிக எரிபொருள் அனுப்பப்பட்டு வடக்கு பகுதியில் உள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த பிறகு எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.