
கல்வான் பள்ளதாக்கு மற்றும் கிழக்கு லடாக்கில் பல்வேறு இடங்களில் சீனா எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் அவசரகால கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் ஃபிரான்ஸ் 6 ரஃபேல் போர் விமானங்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
முதலில் 4 ரஃபேல் போர் விமானங்கள் வருவதாக மட்டுமே இந்தியா வருவதாக இருந்த நிலையில் தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த விமானங்களை நமது போர் விமானிகள் ஓட்டி வந்து அம்பாலா விமானப்படை தளத்தில் கொண்டு சேர்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.