
தெற்கு காஷ்மீரில் ட்ரால் பகுதி அமைந்துள்ளது சுமார் 31 வருடங்களுக்கு பின்னர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கம் இங்கு வேரோடு அழிக்கப்பட்டுள்ளது.
நேற்று ட்ராலில் முக்கிய ஹிஸ்புல் தளபதியான காசிம் மற்றும் அவனது இரு கூட்டாளிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இதனையடுத்து காஷ்மீர் பகுதி ஐஜி விஜய் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “1989ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் முதல் முறையாக ட்ரால் பகுதியில் ஹிஸ்புல் இயக்க பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லாத நிலை உருவாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது பாதுகாப்பு படையினரின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய பலனாக, உத்வேகமாக பார்க்கப்படுகிறது.