
சீனா பல பகுதிகளை தனக்கு உரியது என உரிமை கொண்டாடி வருகிறது. இதை போல இந்தோனேசியாவுக்கு சொந்தமான சில பகுதிகளை சீனா பல ஆண்டு காலமாக உரிமை கோரி வருகிறது.
இதற்கு இந்தோனேசியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஐநா பொது செயலாளர் அவர்களுக்கு இது குறித்து கடிதம் அனுப்பியது.
இதற்கு விளக்கம் அளித்த சீனா இந்தோனேசியாவுடன் எந்த வித எல்லை பிரச்சினையும் இல்லை சில முரண்பாடுகள் மட்டுமே உள்ளன என்றுள்ளது.
இதற்கு இந்தோனேசியா சீனாவின் தான்தோன்றித்தனமான உரிமை கோரல் தவறு என்றும் சீனாவின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு இது குறித்த பேச ஒன்றும் இல்லை எனவும், அப்பகுதி இந்தோனேசியாவுக்கே சொந்தமான பகுதி என செருப்பால் அடித்தாற் போல் கூறியுள்ளது.