விக்ராந்த் கப்பலில் கருவிகள் திருடு போன வழக்கில் இருவர் கைது !!

  • Tamil Defense
  • June 11, 2020
  • Comments Off on விக்ராந்த் கப்பலில் கருவிகள் திருடு போன வழக்கில் இருவர் கைது !!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொச்சியில் கட்டப்ட்டு வரும் ஐ.என.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் இருந்து முக்கியமான கணிணிகள், ஹார்ட் டிஸ்குகள் ஆகியவை திருடு போயின.

இந்த நிகழ்வு அப்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள காவல்துறை விசாரித்து வந்த வழக்கை பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டது. பல ஆயிரம் பேரின் கைரேகைகள் எடுத்துக்கொள்ளப்ட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கப்பலில் பெயின்டர்களாக பணியாற்றி வந்த 23வயது கொண்ட சுமித் குமார் சிங் (முந்தெர்- பிஹார்) மற்றும் 22 வயது நிரம்பிய தயா ராம் (ஹனுமன்கர்- ராஜஸ்தான்).

திருடிய 4 ஹார்ட் டிஸ்குகள், ப்ராசஸர்கள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைனில் விற்க முயன்ற போது இவர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.