
லடாக்கில் இந்தியா-சீனா மோதல் குறித்த பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் தெற்கு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் ஸ்ரீநகர்-ஜம்மு சாலை அருகே அவசர விமான ஓடுதளம் அமைத்து வருகிறது.
இந்த புரோஜெக்டிற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது சாலை போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் சாலையை ஒட்டியே இந்த புதிய விமான ஓடுதளமும் அமைக்கப்படுகிறது.சுமார் 3.5கிமீ தொலைவிற்கு இந்த அவசர விமான தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கொரானா காரணமாக பணிகள் தாமதமாகி வந்தன.தற்போது இந்த பணிகள் மீண்டும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவு பெறும் பட்சத்தில் அவசர காலங்களில் விமானப்படையால் இந்த தளத்தை பயன்படுத்த முடியும்.