இந்தோ திபெத் காவல்படையின் புதிய மேற்கு கட்டளையகம் !!

  • Tamil Defense
  • June 11, 2020
  • Comments Off on இந்தோ திபெத் காவல்படையின் புதிய மேற்கு கட்டளையகம் !!

இந்தோ திபெத் எல்லை காவல்படை புதிதாக மேற்கு கட்டளையகத்தை உருவாக்கி உள்ளது.

இந்த மேற்கு கட்டளையகமானது லடாக், ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சீன எல்லை பகுதியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். இதன் தலைமையகம் சண்டீகர் நகரில் அமைந்துள்ளது.

இந்த புதிய மேற்கு கட்டளையகத்தின் தலைமை அதிகாரியாக ஏ.டி.ஜி. மனோஜ் சிங் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தில்லியில் உள்ள இந்தோ திபெத் எல்லை காவல்படையின் தலைமையகத்தில் நடவடிக்கைகள் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக உள்ளார்.