
TEDBF எனப்படும் புதிய ரக விமானத்தை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேம்பாடு தொடர்பான பணிகள் சீராக நடக்கும் பட்சத்தில் முதல் சோதனை பறப்பு ஆறு ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து பறக்கும் வண்ணம் இந்த விமானம் தயாரிக்கப்படும்.எதிர்காலத்தில் நமது விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் கப்பல்களில் இருந்து இயங்கும் வண்ணம் மேம்படுத்தப்பட உள்ளது.
கடந்த மே 22 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் உடன் ஏடிஏ நிறுவனம் இது தொடர்பாக பேசியுள்ளது.இந்த நிறுவனம் தான் தேஜஸ் விமானத்தையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
.