
சமீபத்தில் கொல்கத்தாவில் அமைந்துள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய கடலோர காவல் படைக்கு புதிய கப்பலை டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் அதிவேக ரோந்து கலன் ஆகும் மேலும் இது ராஜ்ஷ்ரி ரகத்தை சேர்ந்த கலன் ஆகும்.
303 டன்கள் எடையும், 48 மீட்டர்கள் நீளமும் கொண்ட இந்த கப்பலில் 6 அதிகாரிகள் மற்றும் 34 மாலுமிகள் என மொத்தம் 40வீரர்கள் பணியாற்றுவர்.
இந்த கப்பலில் 2 ஃபைபர் படகுகள்,1 ஜெமினி படகு மற்றும் 1 வாட்டர் ஸ்கூட்டர் ஆகியவை தேடுதல் மற்றும் மீட்பு, கடத்தல் தடுப்பு, ஊடுருவல் தடுப்பு போன்ற பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்கும்.
இந்த கப்பலில் 30மிமீ துப்பாக்கி ஒன்றும் உள்ளது. மேலும் ஓருங்கிணைந்த பிரிட்ஜ் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த இயந்திர கட்டுபாட்டு அமைப்பு ஆகியவை இக்கப்பலில் உள்ளன. இந்த கப்பல் அதிகபட்சமாக 3000 கடல் நாட்டிகல் மைல் தொலைவுக்கு பயணிக்கும் திறன் கொண்டது.