
வைஸ் அட்மிரல் பிஸ்வஜீத் தாஸ்குப்தா இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல். பிஸ்வஜீத் தாஸ்குப்தா வெள்ளிக்கிழமை பதவி ஏற்று கொண்டார்.. இதற்கு முன்னர் வைஸ் அட்மிரல் கோர்மடே இப்பதவியை நிர்வகித்து வந்தார்.
இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர் ஆவார். தனது பணிக்காலத்தில் ஐ.என்.எஸ். விராட், ஐ.என்.எஸ். தபார், ஐ.என்.எஸ். கார்முக் உள்ளிட்ட பல முன்னணி போர்க்கப்பல்களை வழிநடத்தி உள்ளார். மேலும் மேற்கு கட்டளையகத்தின் நடவடிக்கைகள் பிரிவிவை நிர்வகித்து வந்தார்.
இதைத்தவிர ஊட்டி வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகள் பணியாளர்கள் கல்லூரியி, தில்லியில் உள்ள தேசிய மாணவர் படையின் தலைமையகம் ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார்.