இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க உள்நாட்டு தயாரிப்பில் அதிநவீன ஏவுகணை !!

  • Jecinth Albert
  • June 3, 2020
  • Comments Off on இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க உள்நாட்டு தயாரிப்பில் அதிநவீன ஏவுகணை !!
அஸ்திரா மார்க்2

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ஏவுகணை ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த புதிய ஏவுகணை ஏற்கனவே படையில் உள்ள அஸ்திரா ஏவுகணையின் புதிய வடிவமாகும்.

இந்த புதிய ஏவுகணை அஸ்திரா மார்க் 2 என அழைக்கப்படலாம், மேலும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாராகும் இந்த ஏவுகணை சுமார் 150கிமீ தொலைவு வரை சூப்பர்சானிக் வேகத்தில் சென்று இலக்கை வானிலேயே தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இந்த ஏவுகணையின் இயக்க வரம்பு 150 கிலோமீட்டர்களுக்கும் அதிகம், மேலும் இதன் அதிகபட்ச வேகம் மாக்4.7 ஆகும் அதாவது மணிக்கு 5804கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.