இந்தோ திபெத் காவல்படைக்கு காலநிலை கட்டுபாட்டு வசதி கொண்ட காவல்சாவடி லடாக்கில் அமைப்பு !!

  • Tamil Defense
  • June 9, 2020
  • Comments Off on இந்தோ திபெத் காவல்படைக்கு காலநிலை கட்டுபாட்டு வசதி கொண்ட காவல்சாவடி லடாக்கில் அமைப்பு !!

லடாக்கில் பாங்காங் ஸோ ஏரி அருகே உள்ள லுகுங் பகுதியில் இந்தோ திபெத் காவல்படைக்கு நவீன காலநிலை கட்டுபாட்டு வசதி கொண்ட காவல்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காவல் சாவடி வழக்கமாக டீசல் அல்லது மண்ணெண்ணெய் கொண்டு செயல்படாமல் சூரிய சக்தி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வெளியே -40டிகிர காலநிலை இருந்தாலும் இந்த காவல்சாவடிக்கு உள்ளே 22-28 டிகிரி காலநிலை நிலவும் வகையில் இது கட்டமைக்க பட்டுள்ளது.
மேலும் லடாக்கில் உள்ள காரகோரம் பகுதி முதல் அருணாச்சல பிரதேச மாநிலம் ஜாசெப் லா வரை இத்தகைய சுமார் 47 காவல்சாவடிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தோ திபெத் எல்லை காவல்படையின் காவல்சாவடிகள் 9000 முதல் 18000 அடி உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் எல்லையோர மாநில அரசுகளிடம் இந்த காவல் சாவடிகள் அமைக்க இடம் தேர்வு செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளது.