
கடந்த மாதம் பாகிஸ்தான் விமானப்படை சாப்2000 ஏவாக்ஸ் விமானம் ஒன்றை பெற்றுள்ளது. இது பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பெறும் 4ஆவது ஏவாக்ஸ் விமானமாகும்.
தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் ஏழு சாப்2000 மற்றும் நான்கு சீன ஷாங்ஸி இசட்.டி.கே 03 என மொத்தமாக 11 ஏவாக்ஸ் விமானங்கள் உள்ளன.
மறுபக்கம் இந்திய விமானப்படையிடம் இரண்டு நேத்ரா மற்றும் மூன்று ஃபால்கன் ஏவாக்ஸ் என மொத்தமாக 5 ஏவாக்ஸ் விமானங்கள் உள்ளன.
இந்திய விமானப்படை மேலதிகமாக 24 நேத்ரா ஏவாக்ஸ் பொருத்தப்பட்ட எம்ப்ரேர் விமானங்களையும், 2 ஃபால்கன் ஏவாக்ஸ் பொருத்தப்பட்ட ஐ.எல்.76 விமானங்களையும், 6 ஏர்பஸ் ஏ330 ஏவாக்ஸ் விமானங்களையும் படையில் இணைக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.