
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டம் சின்யாலிசார் பகுதியில் ஒரு விமான தளம் உள்ளது.
இந்த தளத்தில் முதன் முதலாக இந்திய விமானப்படையின் ஏ.என்32 போக்குவரத்து விமானம் தரை இறங்கி திரும்ப புறப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இந்திய விமானப்படை இதுகுறித்து முறையான தகவல் அளித்த பின்பு தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறினார்.
இந்த சின்யாலிசார் பகுதி சீன எல்லையில் இருந்து 125கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.