இந்திய விமானப்படைக்கு 29 புதிய நேத்ரா ஏவாக்ஸ் விமானங்கள் !!

  • Tamil Defense
  • June 9, 2020
  • Comments Off on இந்திய விமானப்படைக்கு 29 புதிய நேத்ரா ஏவாக்ஸ் விமானங்கள் !!

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் 5 போர்களில் மோதியுள்ளது இதை தவிர இரு நாடுகளுடன் சிறிய அளவிலான போர்களிலும் சண்டையிட்டுள்ளது. தற்போது மற்றுமொரு போரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது. அது ஒற்றை முனை அல்லது இருமுனை போராகவும் இருக்கலாம்.

அதற்கான தகுதிகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிதாக 29 புதிய நேத்ரா ஏவாக்ஸ் விமானங்களை வாங்கும் முடிவில் இந்திய விமானப்படை உள்ளது.

ஏவாக்ஸ் விமானங்கள் இன்றைய நவீன போர்முறைக்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும். இவை ஏசா ரேடார், கண்காணிப்பு ரேடார், மின்னனு மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், போன்ற பல்வேறு வசதிகளை கொண்டவை ஆகும்.

நேத்ரா ஏவாக்ஸ் ரேடார் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும், இந்த அமைப்பு பிரேசில் விமான நிறுவனமான எம்ப்ரேருடைய எம்ப்-145 விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஏவாக்ஸ் அமைப்பு 240டிகிர சுற்றளவுக்கு கண்காணிக்க கூடியது மேலும் இந்த விமானத்தில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி இருப்பதால் பல மணி நேரம் வானிலேயே தொடர்ந்து பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.