
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக்,லிம்பியாதுரா மற்றும் கலாபணி ஆகிய பகுதிகளை நேபாள நாட்டுடன் இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இதனை ஆதரிக்கும் தீர்மானத்தை நேபாள பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றவும் செய்தனர். அப்போது பேசிய நேபாள பிரதமர் கே.பி. ஒலி இந்தியா இப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என பொய் தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருநாட்டு வெளியுறவு செயலர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்த போதிலும் நேபாள பிரதமர் அதனை மறைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார் என கூறியுள்ளது.
ஆனால் நேபாள அரசு வழக்கம் போலவே இதனையும் மறுத்துள்ளது. இதன் பின்னர் சீனாவின் கைங்கரியம் உள்ளது என சந்தேகம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.