ஹாங்காங் அடக்குமுறை விஷயத்தில் சீனாவுக்கு முழு ஆதரவு : நேபாள அரசு !!

  • Jecinth Albert
  • June 4, 2020
  • Comments Off on ஹாங்காங் அடக்குமுறை விஷயத்தில் சீனாவுக்கு முழு ஆதரவு : நேபாள அரசு !!

சமீப காலமாக நேபாள அரசு சீன ஆதரவு நிலைபாட்டுடன் செயல்பட்டு வருவது தெரிந்தது தான், ஆனால் தற்போது இந்த ஆதரவு நிலையை நேபாளம் மிகவும் தீவிரப்படுத்தி கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஹாங்காங் பகுதியை அடக்குமுறை மூலமாக ஒருங்கிணைக்க சீனா முயன்று வருகிறது இதற்கு நேபாளம் முழுமையாக ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், தைவான் உட்பட பல சர்வதேச நாடுகள் இதற்கு எதிராக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேபாளம் சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளது எந்தளவுக்கு சீன ஆதரவு நிலைபாட்டை நேபாளம் தீவிரப்படுத்தி உள்ளது என்பதை காட்டுகிறது.

இதுகுறித்து நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பரத் ராஜ் பாவ்ட்யால் கூறுகையில் ” நேபாளம் ஒரே சீனா எனும் கொள்கையை அங்கீகரித்துள்ளது மேலும் ஹாங்காங் சீனாவின் இன்றியமையாத ஒரு பகுதி” எனவும் கூறியுள்ளார்.