
நேபாளின் நேசனல் அசம்ப்ளி புதிய அரசியல் மேப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது நாம் அறிந்ததே.சில இந்திய பகுதிகளை இணைத்து இந்த புதிய மேப்பை நேபாளம் வெளியிட்டிருந்தது.
தற்போது மேப் வெளியிட்ட பிறகு இந்திய நேபாள எல்லையில் கலபானி என்னுமிடத்தில் தற்போது நேபாளம் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கலபானி அருகே ஒரு இராணுவ நிலையும் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விரிசல் கண்டுள்ள இந்தியா-நேபாள உறவில் இது மீண்டும் பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது.
வியூக முக்கியத்துவம் வாய்ந்த இந்திய பகுதிகளான கலபானி,லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய பகுதிகளை இணைத்து புதிய மேப்களை நேபாளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனியன்று இந்த புதிய மேப் நேபாள மேல் சபையில் 57 வாக்கு என்ற ஆதரவுடன் சட்டமாக்கப்பட்டது.ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் இந்த நகர்வுக்கு காரணம் நேபாளுக்கான சீனத்தூதர் ஹூ யாங்கி என்று உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.