
பிஹார் மாநிலத்தின் சீதாமார்ஹி மாவட்டம் நேபாளத்துடனான எல்லையில் அமைந்துள்ளது.
சில விவசாயிகள் தங்களது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு இருந்த நிலையில் தீடிரென நேபாள காவல்துறையினர். அத்துமீறி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 4 விவசாயிகள் காயமடைந்தனர், 25 வயது கொண்ட நாகேஷ்வர் ராய் எனும் விவசாயி மரணமடைந்துள்ளார்.
ஏற்கனவே நேபாளம் இந்தியாவுடனான உறவுகளை முறித்து கொள்ளும் நிலைக்கு செல்ல விரும்பும் நிலையில் தற்போது இந்த சம்பவம் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு இதற்கு கடுமையான பதிலடியை கொடுத்தால் தான் நாட்டின் மரியாதை காக்கப்படும்.