நேபாள பிரதமர் பதவி விலக சொந்த கட்சியில் வலுக்கும் கோரிக்கை ரா செயலா ??

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on நேபாள பிரதமர் பதவி விலக சொந்த கட்சியில் வலுக்கும் கோரிக்கை ரா செயலா ??

நேபாள பிரதமர் கே.பி.ஒலி பதவி விலக வேண்டும் என அவரது நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலேயே கோரிக்கைகள் வலுத்தி வருகிறது.

நேபாள பிரதமர் இல்லத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மதன் பந்தாரியின் 69ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.ஒலி தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் என்னிடம் இதுவரை யாரும் நேரடியாக பேசவில்லை, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு ஒட்டலில் ஒரு தூதரகத்தின் உதவியோடு பல கூட்டங்கள் நடைபெற்றதாக கூறினார்.

இந்திய தூதரகம் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னாள் நேபாள பிரதமர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான பரச்சான்தா ஒலி அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டார் அவர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார்.

கட்சியில் தனக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்த போதிலும் பதவி விலக கே.பி.ஒலி மறுத்து விட்டார்.

இந்த நிலையில் பரச்சான்தா கே.பி.ஒலி பதவி விலகாவிட்டால் கட்சியை இரண்டாக உடைப்பேன் என மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக எல்லை பிரச்சினை காரணமாகவும் சீனாவுடனான நெருக்கத்தின் காரணமாகவும் இந்திய நேபாள உறவில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.