
இந்தியாவின் கலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா போன்ற பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து வெளியிட்டுள்ள வரைபடத்தை இன்று நேபாள நாடாளுமன்றம் ஒரு மனதாக அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ப்ரதீப் க்யாவாலி கூறுகையில் இந்த நடவடிக்கை பிரச்சினையாக மாறுவதை விரும்பவில்லை மாறாக இதனை பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமான முறையில் முடித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றுள்ளார்.
பிரதான எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி இந்த செயலுக்கு நேபாள பிரதமர் மற்றும் நேபாள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.