
சமீபத்தில் இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து நேபாளம் வரைபடம் ஒன்றை வெளியிட்டது.
இதனையடுத்து வரலாற்றில் முதல்முறையாக நமது உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள 15 நிலைகளுக்கு நேபாளம் ஆயுதம் ஏந்திய படையினரை அனுப்பியுள்ளது.
முன்னர் நேபாள காவல்துறையினர் இந்த நிலைகளை நிர்வகித்து வந்த நிலையில் இந்த மாற்றம் பதட்டத்தை அதிகரித்து உள்ளது.
அதிலும் முன்பிருந்ததை விட (6) சங்கார்ரு மற்றும் ஜூலாகாட் ஆகிய நிலைகளில் அதிகமான வீரர்கள் (20) தற்போது நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .