
நேபாள அரசு சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை தனது நாட்டுக்கு உரியது என உரிமை கோரிவிட்டு புதிய வரைபடத்தை பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அங்கீகாரம் அளித்தது.
தற்போது பீஹார் மாநிலம் கிழக்கு சம்பார்ன் மாவட்டத்தின் சில பகுதிகளை நேபாள அரசு தனக்கு உரியது என உரிமை கோரி வருகிறது.
பீஹார் மாநில அதிகாரிகள் நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள சென்ற போது அதற்கு நேபாள அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பீஹார் அரசு இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளது.