வருகிற ஜூன் 9ஆம் தேதி நேபாள பாராளுமன்றத்தில் இந்தியாவின் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய வரைபடத்தை அங்கீகரிக்கும் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது உத்தராகண்ட மாநிலத்தின் கலாபணி மாவட்டத்தை தனது பகுதி என கூறி வரும் நேபாளம் இந்த பகுதியை புதிய வரைபடத்தில் தனது பகுதியாக காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சட்டதிருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் நேபாள பிரதமர் கே.பி.ஒலி மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.