
ஏற்கனவே நேற்று சோபியான் பகுதியில் உள்ள ரெபான் கிராமத்தில் 5 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வீழ்த்தியதை அறிவோம்.
இன்று அதே சோபியான் பகுதியில் உள்ள பின்ஜுரா கிராமத்தில் 4 பயங்கரவாதிகளை ராணுவம் வீழ்த்தியுள்ளது.
கொல்லப்பட்ட நால்வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அடுத்தடுத்து 9 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது பயங்கரவாதிகளுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.