
மத்திய ரிசர்வ் காவல்படை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் நம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கி வருகிறது.
இந்த படையை நவீனபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது 42,000 கவச உடைகளை வாங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் 176 இலகுரக கவச வாகனங்களை கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதில் 80 மாருதி ஜிப்ஸிகள் குண்டு துளைக்காத கவசங்களால் மறுவடிவமைப்பு செய்யப்படும். இந்த வாகனங்கள் கிரெனெடு தாக்குதல்கள் துப்பாக்கி சுடு போன்றவற்றில் இருந்து வீரர்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட கவச உடைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவை அதிக பதட்டமான காஷ்மீர் மற்றும் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் பணிபுரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.