இன்று இந்தியா சார்பில் இந்திய சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அதிகாரி இவர் தான்

இவரை பற்றி தெரிந்து கொள்ளூங்கள் !!

லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்

இந்திய தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி நிறைவு செய்து இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற இவர் மராத்தா லைட் இன்ஃபான்ட்ரி ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இணைந்தார்.

பின்னர் படிப்படியாக பதவி உயர்வுகளை பெற்ற இவர் கடந்த வருடம் இந்தியாவின் முரட்டுத்தனமான எல்லை பகுதியை காக்கும் 14ஆவது கோர் பிரிவின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றார்.

அதற்கு முன்னர் இந்திய தரைப்படையின் ராணுவ உளவுப்பிரிவின் இயக்குனராக, ராணுவ திட்டமிடல் பிரிவின் இயக்குனராக, ராணுவ சரக்கு போக்குவரத்து படைநகர்வு பிரிவின் இயக்குனராக பதவி வகித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்ற அனுபவம் கொண்டவர் மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படையிலும் அவர் பணியாற்றி உள்ளார்.

மேலும் ஊட்டியில் உள்ள DSSC லும் பயிற்சி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் உள்ள பாதுகாப்பு ஆய்வக கல்லூரியிலும் சிங்கப்பூர் ராஜரத்தினம் சர்வதேச கல்லூரியிலும் மூத்த ஆய்வு அறிஞராக உள்ளார்.

மேலும் இந்திய ராணுவ தயார்நிலையை குறித்த புத்தகம் ஒன்றையுமா எழுதி உள்ளார் அது இனிதான் பதிப்பு செய்யப்படும்.